×

மதுராந்தகத்தில் கோடை மழை

மதுராந்தகம், மே 10: மதுராந்தகம் பகுதியில் கத்திரி வெயில் 104 டிகிரி அளவிற்கு கடுமையாக சுட்டெரித்து வந்தது. இதனால், பகல் நேரங்களில் அனல் காற்று வீசியது. இரவு நேரங்களிலும் வீடுகளில் வெப்பம் அதிகரித்து காணப்பட்டது. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்பட்டு வந்தனர். இந்நிலையில், தமிழ்நாட்டில் வெப்ப சலனம் காரணமாக மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது. இந்நிலையில், நேற்று காலை முதலே பவுஞ்சூர், சோத்துப்பாக்கம், அச்சிறுப்பக்கம், மதுராந்தகம், மேல்மருவத்தூர் உள்ளிட்ட பகுதிகளில் வானில் கருமேகம் சூழ்ந்து கோடை மழை கொட்டியது. இதனால், அப்பகுதிகளில் வெப்பம் தணிந்து குளிர்ச்சியான சூழல் நிலவியது. திடீர் மழையால் வாகன ஓட்டிகள் நனைந்தபடி சென்றனர். சுமார் 20 நிமிடம் கொட்டிய மழையால் சாலை ஓரங்களில் தண்ணீர் ஓடியது. மழை பெய்த போதிலும் பிற்பகல் 2 மணி அளவில் வறண்ட வானிலையுடன் மீண்டும் வெயில் கொளுத்த தொடங்கியது.

The post மதுராந்தகத்தில் கோடை மழை appeared first on Dinakaran.

Tags : Madhuranthak ,Madhurandakam ,Maduraandakam ,
× RELATED மதுராந்தகத்தில் திமுக சார்பில் தண்ணீர் பந்தல்: எம்எல்ஏ திறந்து வைத்தார்